சென்னையில் அமெரிக்க தூதரகம் முற்றுகை: 500-க்கும் மேற்பட்டோர் கைது!

ஈழத்தமிழர்களுக்கு துரோகமிழைக்கும் அமெரிக்காவை கண்டித்து, சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை இன்று காலை 500-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

10922599_1058719640812161_4418226553439156247_n

மே 17 இயக்கம் ஒருங்கிணைத்த இப்போராட்டத்தில் ம.தி.மு.க, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழர் விடியல் கட்சி, விடுதலை தமிழ் புலிகள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சி மற்றும் இயக்கங்கள் கலந்து கொண்டன.

1010152_1058719684145490_3873212744037627429_n

இந்த முற்றுகை போராட்டத்தின் போது, “ஈழ விடுதலையை தடுக்க நினைக்கும் அமெரிக்காவின் மீது பொருளாதார போர் தொடுக்க, கே.எப்.சி, பெப்சி, கோக் போன்ற பொருட்களை புறக்கணிப்போம்” என கோஷமிட்டனர். மேலும், “ஈழ இனப்படுகொலையில் கூட்டுக் களவாணிகளான இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, அதிகாரிகளை விசாரி”க்கக்கோரியும் கோஷமிட்டனர்.

11046479_1058719577478834_6427331634049317934_n

போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயன்றபோது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு ராயபேட்டை அருகே சமூக நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top