மிஷ்கின் படத்திற்கு ஒளிப்பதிவு செய்யும் பி.சி.ஸ்ரீராம்

60c99af9-7b96-43ce-a835-08ced9a1b210_S_secvpf‘பிசாசு’ படத்திற்குப் பிறகு மிஷ்கின் புதுப்படம் ஒன்றை இயக்க இருக்கிறார். இதில் நாயகனாக சரத்குமார் நடிக்க இருக்கிறார். சரத்குமாருக்கு ஜோடியாக முன்னணி கதாநாயகி ஒருவரை நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறார்கள். இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மிஷ்கின் படங்களான ‘சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’, ‘யுத்தம் செய்’, ‘பிசாசு’ ஆகிய படங்களில் ஒளிப்பதிவு அதிகம் பேசப்பட்டது. தற்போது ஒளிப்பதிவாளர்களில் சிறந்தவரான பி.சி.ஸ்ரீராம் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய இருப்பது, ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலகத்தினர் அனைவரிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மிஷ்கின் தற்போது படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் பிசியாக இருக்கிறார். அதை அவர் முடித்தவுடன் சரத்குமாருடன் ஆலோசித்த பின்பு பட ஷூட்டிங் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top