நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு: மன்மோகன் சிங்கிற்கு நீதிமன்றம் சம்மன்!

01-manmohan-singh71-300நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை குற்றம் சாட்டப்பட்டோர் பட்டியலில் சேர்த்து, டெல்லி சிபிஐ நீதிமன்றம் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

நிலக்கரி சுரங்க அமைச்சராக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பொறுப்பு வகித்த காலத்தில், நிலக்கரி சுரங்ககளை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் பிரதமர் மன்மோகன் சிங், தொழிலதிபர் பிர்லா குமாரமங்கலம், நிலக்கரி துறை செயலாளர் பி.சி.பரேக் உள்ளிட்ட 6 பேர் மீது கிரிமினல் சதி, ஊழல் மற்றும் நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய வழக்கு விசாரணையின் போது, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, நிலக்கரி சுரங்கம் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் தொழிலதிபர் பிர்லா குமாரமங்கலம், நிலக்கரி துறை செயலாளர் பி.சி.பரேக்கிற்கும் சம்மன் அனுப்பி நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்றத்தில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள மன்மோகன் சிங், நிலக்கரி வழக்கில் சம்மன் அனுப்பப்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது என்றும், உண்மை வெல்லும் என்றும் கூறியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top