நாட்டின் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் கிடையாது: ராஜ்நாத் சிங்

Rajnath-Singh_18காஷ்மீர் விவகாரத்தில், நாட்டின் பாதுகாப்புக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்போம். கூட்டணிக்கு முன்னுரிமை தரமாட்டோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உறுதிபட தெரிவித்து உள்ளார்.

காஷ்மீரில் பிரிவினைவாத இயக்கத் தலைவர் மசரத் ஆலம், புதிதாக பதவி ஏற்றுள்ள முஃப்தி முகமது சயீத் தலைமையிலான அரசு விடுதலை செய்துள்ளது. இது, நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காசியாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, ”நாட்டின் பாதுகாப்பினை பொறுத்தமட்டில் எந்த விதத்திலும் அரசு சமரசம் செய்து கொள்ளாது. எங்களுக்கு அது எந்த அரசாக இருந்தாலும், அது கூட்டணியோ இல்லையோ, அதற்கு நாங்கள் முன்னுரிமை அளிக்க மாட்டோம். நாட்டுக்கும், நாட்டின் பாதுகாப்புக்கும் தான் நாங்கள் முக்கியத்துவம் அளிப்போம்.

நாடாளுமன்றத்தில் கூறியதுபோல், இப்போதைக்கு நான் ஒரே ஒரு கருத்தைத்தான் தெரிவிக்க முடியும். காஷ்மீரில் உள்ள அரசுக்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கமாட்டோம். நாட்டுக்குத்தான் முன்னுரிமை அளிப்போம். நீங்கள் இதைப் புரிந்துகொள்ள வேண்டும். அனைத்து அம்சங்களும் இதில் அடங்கி உள்ளன என்றே நான் கருதுகிறேன்.

இந்த பிரச்னையில், காஷ்மீர் அரசு அனுப்பியுள்ள தகவலில் நான் முழுமையாக திருப்தி அடையவில்லை. நான் மாநில அரசிடமிருந்து சில தகவல்களை, விளக்கங்களை கேட்டுள்ளேன். அதைப் பெற்றபிறகே எனது கருத்தை கூற முடியும்” என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top