நிலம் கையகப்படுத்துதல் சட்ட திருத்த மசோதா: மாநிலங்களவையில் இன்று விவாதம்

parliament of indiaமக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலம் கையகப்படுத்துதல் சட்ட திருத்த மசோதா, மாநிலங்களவையில் இன்று விவாதத்திற்கு வர உள்ளது.

ஆனால், மாநிலங்களவையில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு போதிய பெரும்பான்மை கிடையாது. எனவே, எதிர்க்கட்சிகளை சமாதானப்படுத்தி மசோதாவை ஆதரிக்கச் செய்யும் முயற்சியில் பாரதிய ஜனதா கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.

கூட்டணியில் இடம்பெறாத அ.தி.மு.க, தெலங்கானா ராஷ்டிர சமிதி உறுப்பினர்கள் மக்களவையில் மசோதா நிறைவேற ஆதரவு தெரிவித்துள்ளதால், மாநிலங்களவையிலும் இதே நிலை தொடரும். என்றாலும், அரசுக்கு பெரும்பான்மை இல்லாததால், மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து மசோதாவை தோற்கடிக்க முயலும்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top