நாகாலந்தில் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை அடித்தே கொன்ற மக்கள்!

06-1425616316-rape-accused-killed-500நாகாலந்தில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு கைதான வாலிபரை, சிறையை உடைத்து வெளியே இழுத்து கொடூரமாக ஒரு கும்பல் கொன்றுள்ளது.

வங்க தேசத்தை பூர்வீகமாக கொண்ட 35 வயதான சையத் பரீத்கான் என்பவர் நாகாலந்தில் சட்ட விரோதமாக குடியேறி வசித்து வந்தார். அங்கு இவர், பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் சையத், நாகா பழங்குடி இனத்தை சேர்ந்த 20 வயது பெண்ணை கடந்த மாதம் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் பல இடங்களுக்கு அழைத்து சென்று வலுகட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இந்த புகாரின்பேரில், கடந்த 25 ஆம் தேதி சையத்தை போலீசார் கைது செய்தனர். மேலும், கைது செய்யப்பட்ட சையத் விசாரணை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த ஒரு கும்பல், கடும் பாதுகாப்பையும் மீறி சிறையை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தது. மேலும், சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சையத் பரீத்கானை சிறைக்குள் இருந்து தரதரவென வெளியே இழுத்து வந்துள்ளது. அதன் பின்னர் அந்த கும்பல், சையத்தை நிர்வாணமாக்கி, அடித்து சித்திரவதை செய்தபடியே ஊர்வலமாக நகரின் மையப்பகுதிக்கு இழுத்து சென்றது.\

இதிலும் ஆத்திரம் அடங்காத அந்த கும்பல், சையத்தை மேலும் கடுமையாக தாக்கி அடித்தே கொன்றது. அப்போது, அங்கிருந்த வாகனங்களையும் அந்த கும்பல் தீயிட்டு கொளுத்தியது. சம்பவ இடத்தில் போலீசார் எவ்வளவு முயன்றும் அந்த கும்பலை கட்டுப்படுத்த முடியவில்லை. உடனே, போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதன் பிறகு, அந்த வன்முறை கும்பல் சையத்தை அங்கேயே விட்டுவிட்டு கலைந்து சென்றது.

குற்றம் நிரூபிக்கப்படாமல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ஒருவரை, போலீசாரின் பாதுகாப்பையும் மீறி மத்திய சிறைக்குள் புகுந்த கும்பல், அவரை சிறைக்குள் இருந்து இழுத்துவந்து அடித்தே கொன்றுள்ள இந்த சம்பவம் தற்போது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top