பாலியல் வன்கொடுமை தொடர்பான ஆவணப்படத்தை வெளியிட மத்திய அரசு தடை!

பாலியல் வன்கொடுமைடெல்லி மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான ஆவணப்படத்தை ஒளிபரப்ப மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம், ஆவணப்படத்தில் பாலியல் வன்கொடுமை குற்றவாளி அளித்த பேட்டியின் கருத்துக்களையும் ஊடகங்கள் வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது. 2012-ஆம் ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதி இரவு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.அப்போது கொடூரமாக தாக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து பி.பி.சி தொலைக்காட்சியைச் சேர்ந்த லெஸ்லீ உத்வின் என்பவர், ஆவணப் படம் தயாரித்துள்ளார். இதில் திஹார் சிறையில் வைத்து குற்றவாளி முகேஷ் சிங்கிடமும் அவர் பேட்டி எடுத்துள்ளார். அதில், பெண்களுக்கு எதிரான கருத்துக்களை முகேஷ் சிங் கூறியிருப்பதாக தகவல் வெளியானதால், ஆவணப்படத்தை வெளியிட எதிர்ப்பு கிளம்பியுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top