உத்தரகாண்டில் பனிச்சரிவு: பாதுகாப்பு படையினர் இருவர் பலி!

avalancheஉத்தரகாண்ட் மாநிலத்தில் சோதனைச்சாவடி மீது பனிப்பாறைகள் சரிந்து விழுந்ததில் பாதுகாப்பு படை வீரர்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர். மாயமான ஒருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் அங்கு இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடும் பனிப்பொழிவுக்கு இடையே அங்கு மழையும் பெய்தது.

இந்நிலையில் நேபாள எல்லையோரம் உள்ள பிதோராகார்க் மாவட்டம் சியாலக் பகுதியில் கடும் பனிச்சரிவு ஏற்பட்டது. எல்லைப்புற சோதனைச்சாவடி மீதும் பனிப்பாறைகள் விழுந்தன. சம்பவம் நடைபெற்றபோது சோதனைச்சாவடியில் 8 பாதுகாப்பு படையினர் இருந்துள்ளனர். அவர்கள் அனைவரும் பனிச்சரிவில் சிக்கிக் கொண்டனர். சம்பவம் அறிந்து வந்த மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இதில், 5 பேர் உயிருடன் மீக்கப்பட்டனர். இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும், ஒருவர் என்ன ஆனார் எனத் தெரியவில்லை. அவரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top