தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

சென்னை வானிலை - Regional_metrological_centre_chennaiவங்க கடலில் இலங்கை அருகே நேற்று முன்தினம் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்பட பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. உள் மாவட்டங்களிலும் ஓரிரு பகுதிகளில் மழை பெய்தது. இது வெயிலின் உச்சத்தை தணிப்பதாக அமைந்தது.

இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு பலவீனம் அடைந்து கலைந்து விட்டது. ஆனாலும் அதன் மேக கூட்டங்கள் அவ்வப்போது திரண்டு வருவதால் ஓரிரு சமயம் மழை தூறல் விழுகிறது.

சென்னையில் நேற்று 89 டிகிரி வெயில் கொளுத்திய நிலையில், வெப்ப சலனம் காரணமாக கருமேகங்கள் திரண்டன. இதனால் இன்று காலையில் வானம் மேக மூட்டமாக காணப்பட்டது. சென்னையில் ஒருசில இடங்களில் மழை துறல்கள் விழுந்தன.

இன்றிரவு தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top