பா.ஜ.க.விடம் முப்தி முகமது சயீத் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: குலாம்நபி ஆசாத் கருத்து!

ghulam nabi azadபா.ஜ.க.விடம் முப்தி முகமது சயீத் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் குலாம்நபி ஆசாத் கருத்து தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தில், மக்கள் ஜனநாயக கட்சியும், பா.ஜ.க.வும் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. மக்கள் ஜனநாயக கட்சியின் நிறுவனர் முப்திமுகமது சயீத் காஷ்மீர் மாநிலத்தின் முதல்வராக நேற்று பதவி ஏற்று கொண்டார்.

இந்த கூட்டணியை காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, தேசிய மாநாட்டு கட்சி ஆகியவை விமர்சனம் செய்துள்ளன. டெல்லி மேல்சபை காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத், இந்த கூட்டணி தொடர்பான அனைத்து முடிவுகளும் நாக்பூரில் (ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் அமைந்துள்ள இடம்) தான் எடுக்கப்படுகிறது என்று ஏற்கனவே கூறியிருந்தார். முதல்-மந்திரி பதவி ஏற்புக்கு பின்னர்

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தலைவர் குலாம்நபி ஆசாத் கூறும்போது, ”இது பதவி ஏற்பு விழா என்பதைவிட, பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு கூட்டம் போல் தான் இருந்தது.

பா.ஜ.க. இப்போது மதமாற்றம் செய்து வரும் காலகட்டத்தில் இருக்கிறது. அதனால், மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர்கள், குறிப்பாக முதல்வராக பதவி ஏற்றிருக்கும் முப்திமுகமது சயீத் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையென்றால், மக்கள் ஜனநாயக கட்சியில் இருந்து பா.ஜ. கட்சிக்கு அரசியல் மாற்றம் நடந்துவிடும்” என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top