பெரு நிறுவனங்களுக்கு சாதகமாக பட்ஜெட்: எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு!

01-manmohan-singh71-300பெரு நிறுவனங்களுக்கு சாதகமாக பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

ஏழைகளுக்காக அல்லாமல், மக்களவைத் தேர்தலின் போது பாரதிய ஜனதாவிற்கு ஆதரவு அளித்த பணக்காரர்களுக்கு சாதகமாக பட்ஜெட் போடப்பட்டுள்ளதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இலக்கை எட்டுவதற்கான தெளிவான திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தேசியவாத காங்கிரஸ், மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் பட்ஜெட் அமையவில்லை என்று குறை கூறியுள்ளது. வேலைவாய்ப்பு, விவசாயம் மற்றும் கருப்புப்பணத்தை மீட்பது ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று ஐக்கிய ஜனதா தளம் குற்றம்சாட்டியுள்ளது.

பெரு நிறுவனங்களை மையமாக வைத்தே பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சியும், ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களுக்கு எதிரான பட்ஜெட் என்று திரிணாமூல் காங்கிரசும் விமர்சித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top