அன்னை தெரசா குறித்த ஆர்எஸ்எஸ் தலைவரின் கருத்தால் சர்ச்சை!

mohan-bhagwatஅன்னை தெரசா குறித்து ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதுபற்றி கத்தோலிக்க ஆயர்களின் கூட்டமைப்பு தலைவர் கார்டினல் மார் பேஸ்லியோஸ் கிளீமிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேவையை மட்டுமே வாழ்க்கையின் நோக்கமாக கருதி புனிதத் துறவியாக வாழ்ந்தவர் அன்னை தெரசா எனக் குறிப்பிட்டுள்ளார். அப்படிப்பட்ட ஒருவரைப் பற்றி அவதூறு பரப்புவது மனித நேயமற்ற செயல் என கிளீமிஸ் கூறினார்.

சாதி, மத தடைகளைத் தாண்டி அன்னை தெரசாவை மக்கள் புனிதமானவராக கருதுகின்றனர் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். ஆர்எஸ்எஸ்சின் கருத்து இந்தியாவில் நீண்ட காலமாக நிலவி வரும் ஒன்றுபட்ட பாரம்பரியத்திற்கு ஊறுவிக்கக் கூடியதாகும் என கிளீமஸ் குறிப்பிட்டார்.

இதனிடையே வாடிகன் செய்தித் தொடர்பாளர் ஒருவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகம் முழுவதும் உள்ள ஏழைகளுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் அன்னை தெரசா கலங்கரை விளக்கம் போல் திகழ்ந்ததாக வாடிகன் தெரிவித்துள்ளார். தெரசாவின் வாழ்க்கை உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு தூண்டுகோலாக அமைந்துள்ளது என வாடிகன் கூறியிருக்கிறது.

நேற்று முன்தினம் ராஜஸ்தானில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், சேவை என்கிற பெயரில் அன்னை தெரசா கிறிஸ்தவ மதத்தை பரப்பியதாக குற்றம்சாட்டியிருந்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top