உக்ரைனில் போர் நிறுத்தம்: போர் கைதிகள் 191 பேர் விடுதலை!

ukrain_2303340fஉக்ரைனில் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அதில் இதுவரை 5700 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் சண்டையை முடிவுக்கு கொண்டு வர மின்ஸ் நகரில் போர் நிறுத்த பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

அதில், ரஷ்யா, ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகள் ஈடுபட்டன. அதை தொடர்ந்து கடந்த 12 ந்தேதி முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இருந்தாலும் ராணுவம் மற்றும் கிளர்ச்சியாளர்கள் தரப்பில் போர் நிறுத்தம் மீறப்பட்டது. இருந்தாலும் அமெரிக்க தலையீட்டின் பேரில் போர்நிறுத்தம் தொடரப்பட்டது.

போர்நிறுத்தத்தை தொடர்ந்து இரு தரப்பிலும் பிடித்து வைத்திருந்த போர்க் கைதிகள் விடுதலை செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டனர். அதன்படி 139 ராணுவ வீரர்களும், 52 கிளர்ச்சியாளர்களும் ஆக மொத்தம் 191 போர் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இவர்கள் ஷாலோபோக் நகரம் அருகே விடுதலை செய்யப்பட்டனர். இந்த தகவலை உக்ரைன் அதிபர் பெட்ரோ பொரொ ஷென்கோ டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top