வங்கி ஊழியர் சங்கங்களுடனான முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி!

bank-employeesவங்கி ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ள 4 நாள் வேலைநிறுத்தம் தொடர்பாக டெல்லியில் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதையடுத்து, 23ம் தேதி திங்கட்கிழமை இந்திய வங்கிகள் சங்கத்துடன் ஊழியர் சங்கப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அகில இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பின் செயலாளர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.

மத்திய தொழிலாளர்நல ஆணையர் தலைமையில் நடந்த கூட்டத்தில் 9 ஊழியர் சங்கங்கள், நிர்வாக தரப்பில் இந்திய ஊழியர் சங்கம் ஆகிய முத்தரப்பினர் பங்கேற்றதாக அவர் கூறினார். வேலைநிறுத்தத்தை கைவிடுமாறு வலியுறுத்தப்பட்டதாகவும், அதை வங்கி ஊழியர் சங்கங்கள் நிராகரித்து விட்டதாகவும் கூறிய அவர், மீண்டும் திங்கட்கிழமை இந்திய வங்கிகள் சங்கத்துடன் பேச ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

வங்கி ஊழியர்களின் ஊதியப் பிரச்னையில் அன்றைய தினமும் உடன்பாடு ஏற்படாவிட்டால் திட்டமிட்டபடி 25 முதல் 28ம் தேதி வரையும், மார்ச் 16 முதல் காலவரம்பின்றியும் வேலைநிறுத்தம் நடைபெறும் என்றும் வெங்கடாசலம் தெரிவித்தார்.

வங்கி ஊழியர் சங்கங்கள் 19.5 சதவிகித ஊதிய உயர்வு கேட்டு வரும் நிலையில், நிர்வாகத் தரப்பில் 13 சதவிகிதம் அளிக்க முன்வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top