வங்கி ஊழியர் சங்கங்களுடன் டெல்லியில் இன்று பேச்சுவார்த்தை!

வங்கி ஊழியர்கள்வேலைநிறுத்தம் அறிவித்துள்ள வங்கி ஊழியர் சங்கங்களுடன் டெல்லியில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுத் துறை வங்கி ஊழியர் சங்கங்கள் தரப்பில், வருகிற 25ம் தேதி முதல் 28ம் தேதி வரை 4 நாட்கள் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 4 நாட்களுக்குப் பிறகு ஒன்றாம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், தொடர்ந்து 5 நாட்களுக்கு வங்கிச் சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, டெல்லியில் மத்திய தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில், இன்று மதியம் 3 மணிக்கு முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பள உயர்வு இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் உள்ள நிலையில், 19 சதவிகித ஊதிய உயர்வை வங்கி ஊழியர் சங்கங்கள் வலியுறுத்துகின்றன. 13 சதவிகிதம் வரை வங்கி நிர்வாகத் தரப்பில் ஒப்புக் கொள்ளப்பட்ட நிலையில், கடந்த முறை அறிவிக்கப்பட்ட 4 நாள் வேலை நிறுத்தம் ஒத்தி வைக்கப்பட்டது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top