சிம்புவின் கருத்துக்கு பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன்சிம்பு எப்போதும் தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர். இவர் சில மாதங்களுக்கு முன் தமிழகத்தில் முன்னணி வார இதழ் ஒன்றிற்கு பேட்டியளித்தார்.

இதில் உங்களுக்கு பிறகு வந்த சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதியெல்லாம் நல்ல இடத்தை பிடித்து விட்டார்களே என்று கேட்டதற்கு அவர் ‘இன்னொருத்தர் முதுகில் ஏறி வளர்பவரைப் பத்திச் சொல்ல ஒண்ணுமில்லை’ என்று சிவகார்த்திகேயனை சீண்டுவது போல் பதில் அளித்திருந்தார்.

தற்போது அதே பத்திரிக்கையில் இந்த வாரம் சிவகார்த்திகேயன் பேட்டியளிக்க, அவரிடம் சிம்பு கூறியது குறித்து கருத்து கேட்கப்பட்டது.

இதில் அவர் ‘இதையெல்லாம்விட பெரிய அடியெல்லாம் பார்த்தாச்சு. இது ஒரு விஷயமா? முதல்ல அந்தப் பேட்டியில் என் பேர் இல்லை. அதனால அதுக்கு நான் ரியாக்ட் பண்ணலை. அப்படியே அவர் என்னைத்தான் குறிப்பிட்டிருந்தாலும், அது அவரோட கருத்து. அவர் கருத்தை அவர் சொல்றதுக்கு அவருக்கு உரிமை உண்டு’ கூலாக கூறியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top