ராணுவ ஆட்சிக்கு சதி: ராஜபக்சே நேரில் ஆஜராக இலங்கை நீதிமன்றம் சம்மன்!

ராஜபக்சேநாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் ஈடுபட்ட ராஜபக்சே மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், மார்ச் 31ஆம் தேதி நேரில் ஆஜராக இலங்கை உயர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் தலைமையிலான மூன்று நீதியரசர்களை கொண்ட குழு இந்த உத்தரவை பிறப்பித்தது.

முன்னிலை சோசலிஸக் கட்சியின் தலைவர் துமிந்த நாகமுவ தாக்கல் செய்த மனுவில், கடந்த அதிபர் தேர்தலுக்கு அடுத்த நாள் ஜனவரி 9ஆம் தேதியன்று கொழும்பில் முப்படைகளையும் தயார்படுத்தி நாட்டில் குழப்ப சூழ்நிலையை ஏற்படுத்த முனைந்தார் என்ற குற்றச்சாட்டே  ராஜபக்சே மீது சுமத்தப்பட்டுள்ளது.

இது அரசியல் அமைப்பின்படி அடிப்படை உரிமை மீறல் செயலாகும் என்று மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஸ்ரீபவன் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, மார்ச் 31ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ராஜபக்சேவுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top