தங்கையின் பிரிவினால் ஆழ்ந்த துயரத்தில் நடிகர் சிம்பு

simbuதங்கை திருமணம் ஆகி கணவர் வீட்டுக்கு சென்றதை எண்ணி ஆழ்ந்த துயரத்தில் மூழ்கி உள்ளாராம் நடிகர் சிம்பு. 

தற்போது ஹன்சிகாவை காதலித்து வரும் சிம்புவிடம், உங்கள் திருமணம் எப்போது என்று கேட்க்கும் போதெல்லாம் தங்கை இலக்கியா திருமணம் முடிந்த பிறகுதான் எனக்கூறி தப்பித்து வந்தார் அவர். 

இலக்கியாவுக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது. திருமணத்தை தொடர்ந்து இலக்கியா கணவர் வீட்டுக்கு புறப்பட்டு சென்றதால் மிகுந்த துயரத்தில் ஆழ்ந்த சிம்பு தனது சமூக வலைத்தளத்தில் கண்ணீர் மல்க பதிவிட்டுள்ளார்.

அதில், “திருமணத்துக்கு பிறகு எனது தங்கை அவரது கணவர் வீட்டுக்கு சென்றுவிட்டார். அந்த பிரிவை தாங்க முடியாமல் அழுதுகொண்டிருக்கிறேன். காதலில் ஏற்பட்ட பிரிவைவிட இந்த பிரிவுதான் என்னை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த பிரிவை எப்படி தாங்கிக்கொள்ளப் போகிறேன் என்று எனக்கு தெரியவில்லை. இலக்கியா புறப்பட்டு சென்ற அடுத்த நிமிடம் முதல் என் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top