எகிப்தியர்கள் 21 பேரின் தலை துண்டிப்பு: ஐஎஸ் அமைப்பு அட்டுழியம்!

லிபியாவில் ஐஎஸ் அமைப்பினரால் கடத்தப்பட்ட 21 பேர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டுள்ள வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

ஐஎஸ் அமைப்பு

 

கொல்லப்பட்ட 21 பேரும் எகிப்து நாட்டினர் ஆவர். லிபியாவில் வேலை செய்து வந்த எகிப்தியர்கள் 21 பேர் , கடந்த மாதம் கடத்தப்பட்டனர்.  இந்த கடத்தலுக்கு பொறுப்பேற்ற ஐஎஸ் அமைப்பு தற்போது, அவர்களை கொன்றுள்ளது.

ஆரஞ்சு நிற உடையில் 21 பேரும் தரையில் மண்டியிட செய்து, அவர்களின் தலையை கத்தியால் துண்டித்தனர்.  இந்த காட்சிகள் தற்போது இணையதளத்தில் வெளியாகி உள்ளது.  கொல்லப்பட்டவர்கள், கிறித்துவர்கள் என்றுக் கூறப்படுகிறது.

எகிப்தில் இஸ்லாமிய பெண்கள் துன்புறத்தப்பட்டதற்கு பழி வாங்கும் நோக்கில் அந்நாட்டை சேர்ந்த கிறித்துவர்கள் 21 பேரை கடத்தி தலையை துண்டித்து கொன்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக  ஏழு நாள் துக்கம் கடைப்பிடிக்கப்படுவதாக எகிப்து அரசு அறிவித்துள்ளது. இந்த கொடூர சம்பவத்திற்கு உலகநாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top