இலங்கை அதிபர் மைத்திரபால சிறிசேன இன்று இந்தியா வருகை!

சிறிசேனாஇலங்கை அதிபர் மைத்திரபால சிறிசேன, 4 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று இந்தியா வருகிறார். இலங்கையின் அதிபராக பதவியேற்ற பிறகு சிறிசேன மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.

நாளை பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து சிறிசேன பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்த சந்திப்பின் போது மீனவ பிரச்னை, தமிழர் விவகாரத்தில் இலங்கை மேற்கொண்டுள்ள நல்லிணக்க செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

அதேபோல் பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பான ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் என்று கூறப்படுகிறது. இந்த சுற்றுப்பயணத்தின் அங்கமாக அதிபர் சிறிசேன, புத்தகயா மற்றும் திருப்பதி கோயிலுக்கு 17ம் தேதி செல்கிறார். இதைத் தொடர்ந்து 18ம் தேதி சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு மைதிரபால சிறிசேன இலங்கை திரும்புகிறார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top