தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பை நடத்த வலியுறுத்தி சென்னை ஐநா அலுவலகம் முற்றுகை!

chennai_un_office_protestதமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பை நடத்த வலியுறுத்தி சென்னை அடையாரில் உள்ள ஐநா அலுவலகம் முன்பு மே பதினேழு இயக்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

கடந்த 65 ஆண்டு காலமாக இலங்கையில் நடைபெற்று வரும் தமிழினப் படுகொலைக்கான சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பை நடத்த கோரியும் சென்னை அடையாரில் உள்ள ஐநா அலுவலகம் முன்பு இந்த முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

மே பதினேழு இயக்கம் ஒருங்கிணைத்த இந்த போராட்டத்தில் மதிமுக, தந்தை பெரியார் திராவிடர் கழகம், எஸ்.டி.பி.ஐ., தமிழர் விடுதலை கழகம், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம், தமிழ் தேசிய பேரியக்கம், தமிழக இளைஞர் எழுச்சி கழகம், தமிழ் விடுதலை புலிகள் கட்சி, விடுதலை தமிழ் புலிகள் கட்சி, பாலச்சந்திரன் மாணவர் இயக்கம், தமிழர் இளைஞர் மாணவர் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த இருநூற்று ஐம்பதுக்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.

chennai_un_office_protest

chennai_un_office_protest

chennai_un_office_protest

போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பை நடத்தக் கோரியும், தமிழினப் படுகொலைக்கான சர்வதேச விசாரனைய நடத்த வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். மேலும் இலங்கையில் தமிழினப் படுகொலைக்கு துணைபோன ஐநா அலுவலக அதிகாரிகளை விசாரிக்கக் கோரியும் முழக்கங்களை எழுப்பினர். பின்னர் போராட்ட பிரதிநிதிகள் ஐநா அலுவலக அதிகாரிகளை நேரில் சந்தித்து எழுத்து மூலமாகவும் தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர்.

பின்னர் போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு அருகிலுள்ள சமுதாய நலக்கூடத்தில் அடைக்கப்பட்டனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top