தோனி குழந்தையின் பெயர் என்ன தெரியுமா?

dhoni with shaksiகடந்த இரு நாட்களுக்கு முன் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு பெண் குழந்தை பிறந்தது. தற்போது உலகக் கோப்பை போட்டிக்காக தோனி ஆஸ்திரேலியாவில் இருப்பதால் தனது குழந்தையை பார்க்க தோனி இந்தியா வரவில்லை. இந்நிலையில்தான் அவரது குழந்தைக்கு ஷீபா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தோனிக்கு குழந்தை பிறந்ததையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் தோனி மற்றும் சக வீரர்களுக்கு விருந்தளிக்கப்பட்டது. விருந்தின் போது சக வீரர்களிடேயே இந்த தகவலை தோனி பகிர்ந்து கொண்டார். தனது மனைவி ஷாக்ஷிக்கு இந்த பெயர் மிகவும் பிடித்திருந்தால் அதையே அவர் சூட்டியதாகவும் தோனி கூறியுள்ளார். பெர்ஷிய மொழியில் ஷீபா என்பதற்கு அழகு என்று அர்த்தமாம்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top