அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: 5 பேர் உயிரிழப்பு!

shooting_killsஅமெரிக்காவில் உள்ள அட்லாண்டா பகுதியில் நடந்தத் துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர்.

இரண்டு மாடி குடியிருப்புப் பகுதியில் ஒரு வீட்டினுள் நுழைந்த மர்ம நபர் தனது முன்னாள் மனைவி மீதும், குழந்தைகள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தினார். பிறகு தன்னையும் சுட்டுக் கொண்டார். இதில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் உட்பட 5 பேர் பலியாகினர். மேலும் 2 குழந்தைகள் காயமடைந்தனர்.

மாலை 3 மணியளவில் இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்து சென்றனர். துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த இரண்டு குழந்தைகள் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

துப்பாக்கி சூடு நடத்தியவர் யார், பலியானவர்களுக்கும் இவருக்கும் என்ன தொடர்பு என்பதை காவல்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர். துப்பாக்கி சூடு நடத்தியவர் பெயர் வெளியிடப்படவில்லை.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top