சென்னையில் நாளை கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டம்!

BCCI

ஐ.பி.எல்.சூதாட்ட வழக்கில் கடந்த 22–ந்தேதி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் 6 வார காலத்துக்குள் இந்திய கிரிக்கெட் வாரிய புதிய நிர்வாகிகள் தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. ஐ.பி.எல். அமைப்பில் தொடர்பில் உள்ளவர்கள் கிரிக்கெட் வாரிய தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் தனது உத்தரவில் தெரிவித்தது.

அதன்படி இந்திய கிரிக்கெட் வாரிய தேர்தலை நடத்துவது பற்றி முடிவு செய்வதற்காக கிரிக்கெட் வாரியத்தின் செயற்குழு கூட்டம் சென்னையில் நாளை நடக்கிறது. இந்த கூட்டத்தில் தேர்தலுக்கான பொதுக்குழுவை எப்போது நடத்தலாம் என்பது பற்றி முடிவு செய்யப்படும். இந்த கூட்டத்தில் முன்னாள் நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.

வருகிற 12–ந்தேதி பொதுக்குழு கூட்டம் நடத்தப்படலாம் என்று தெரிகிறது. இதற்கிடையே செயற்குழுவுக்கு முன்னதாக என்.சீனிவாசன் தனது ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமத்தை துறந்தால் மட்டுமே என்.சீனிவாசன் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிட முடியும்.

கிரிக்கெட் வாரியத்தில் அவருக்கு பெரும்பான்மையான ஆதரவு உள்ளது. இதனால் அவர் தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமத்தை தொடர விரும்பினால் அவரது ஆதரவாளராக இருக்கும் ஷிவ்லால் யாதவ் தலைவர் பதவிக்கு போட்டியிடலாம்.

இதற்கிடையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பங்குகளை விற்பது தொடர்பாக இந்திய சிமெண்ட்ஸ் நிறுவனம் ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top