டெல்லி சட்டசபை தேர்தல்: வாக்குபதிவு துவக்கம்!

kejriwal-bedi70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்குபதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி 5.64 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பா.ஜ.க., ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளிடையே மும்முனைப் போட்டி. 70 தொகுதிகளில் டெல்லி சட்டசபைக்கு 66 பெண்கள் உட்பட 673 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில் சுமார் 12 ஆயிரத்து 177 வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் டெல்லி ஆட்சியை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என பா.ஜ.க. மற்றும் ஆத் ஆத்மி கட்சிகள் தீவிர பிரசாரத்திலும் ஈடுபட்டு வந்தன.

”கடந்த முறை முதல்வர் பதவியை ராஜினாமா செய்தது தவறுதான். இனிமேல் அவ்வாறு செய்யமாட்டேன். எனவே, இந்த தேர்தலில் பெருவாரியான வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யுங்கள்” என ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், அக்கட்சியின் முதல்வர் வேட்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அதேபோல், அன்னா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டவரும், முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியுமான கிரண்பேடியை பா.ஜ.க.வின் முதல்வர் வேட்பாளராக அக்கட்சி களமிறக்கி, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டது. அதேபோல், பிரதமர் மோடியும், டெல்லியில் எப்படியாவது ஆட்சியை கைப்பற்றி விடவேண்டும் என அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில், டெல்லி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இதில் பதிவாகும் வாக்குகள் வரும் 10ஆம் தேதி எண்ணப்பட்டு அன்று மாலையே முடிவுகள் அறிவிக்கப்படும்.

வாக்குப்பதிவை முன்னிட்டு டெல்லி முழுவதும் சுமார் 55 ஆயிரம் துணை ராணுவனத்தினர் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காலை 9 மணி நிலவரப்படி 5.64 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top