டெல்லி சட்டசபை தேர்தல்: நாளை காலை வாக்குப்பதிவு தொடக்கம்!

டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்குபதிவு நாளை (7ஆம் தேதி) காலை தொடங்குகிறது.

26-1422275224-kejriwalbedi

டெல்லி சட்டசபை தேர்தல் நாளை (7ஆம் தேதி) நடக்கிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் 70 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. மேலும், இங்கு மொத்தம் 673 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இதில் பா.ஜ.க, ஆம் ஆத்மி கட்சிகளிடையே பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, டெல்லி ஆட்சியை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என பா.ஜ.க. மற்றும் ஆத் ஆத்மி கட்சிகள் தீவிர பிரசாரத்திலும் ஈடுபட்டு வந்தன.

”கடந்த முறை முதல்வர் பதவியை ராஜினாமா செய்தது தவறுதான். இனிமேல் அவ்வாறு செய்யமாட்டேன். எனவே, இந்த தேர்தலில் பெருவாரியான வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யுங்கள்” என ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், அக்கட்சியின் முதல்வர் வேட்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அதேபோல், அன்னா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டவரும், முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியுமான கிரண்பேடியை பா.ஜ.க.வின் முதல்வர் வேட்பாளராக அக்கட்சி களமிறக்கி, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டது. அதேபோல், பிரதமர் மோடியும், டெல்லியில் எப்படியாவது ஆட்சியை கைப்பற்றி விடவேண்டும் என அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில், டெல்லி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (7ஆம் தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இதில் பதிவாகும் வாக்குகள் வரும் 10ஆம் தேதி எண்ணப்பட்டு அன்று மாலையே முடிவுகள் அறிவிக்கப்படும்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top