இந்திய கிரிக்கெட் வாரிய தேர்தலில் மீண்டும் களமிறங்கும் என்.சீனிவாசன்?

icc srinivasanஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் கடந்த 22–ந்தேதி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் 6 வார காலத்துக்குள் இந்திய கிரிக்கெட் வாரிய புதிய நிர்வாகிகள் தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. ஐ.பி.எல். அமைப்பில் தொடர்பில் உள்ளவர்கள் கிரிக்கெட் வாரிய தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் தனது உத்தரவில் தெரிவித்தது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளராக இருக்கும் என்.சீனிவாசனுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமத்தை துறந்தால் மட்டுமே அவரால் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிட முடியும் என்ற நிலைமை ஏற்பட்டது.

இதற்கிடையே இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவிக்கு என்.சீனிவாசன் மீண்டும் போட்டியிட விரும்புவதாக தனியார் டெலிவிஷன் ஒன்று தெரிவித்துள்ளது. அவர் நேற்று முன்தினம் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்து பேசினார். இதன் பிறகு இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கிரிக்கெட் வாரிய தலைவர் பதவிக்கு மீண்டும் வருவதன் மூலம் சென்னை அணி விற்கப்படலாம் என்று கூறுப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயற்கூட்டம் வருகிற 8–ந் தேதி சென்னையில் நடக்கிறது. இந்த கூடடத்தில் வருடாந்திர பொதுக்குழு தேதி முடிவு செய்யப்படும் இந்த கூட்டத்துக்கு ஒரு நாள் முன்பு அதாவது 7–ந் தேதி என்.சினீவாசன் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். வருகிற 12–ந் தேதி கிரிக்கெட் வாரிய தேர்தல் நடைபெறும் என்று தெரிகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top