ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: பாதுகாப்பு படையினர் திருச்சி வருகை

PARA-MILITARY_2300763fதிருச்சி ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலுக்கான பாதுகாப்பு பணிகளை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். இதன் ஒருபகுதியாக துப்பாக்கி ஏந்திய நூற்றுக்கணக்கான துணை ராணுவ படையினர் திருச்சி வந்தடைந்தனர்.

மத்திய பாதுகாப்பு படை, இந்தோ- திபெத்திய எல்லை பாதுகாப்பு படை ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 800 வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

திருச்சி வந்தடைந்த பாதுகாப்பு வீரர்கள் குறித்து செய்தி சேகரிக்க சென்ற, செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், துணை ராணுவ படையினருக்கும் செய்தியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top