சென்னையில் பிப். 8-ல் இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டம்!

bcci_630ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் கடந்த மாதம் 22-ந்தேதி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், ‘அடுத்த 6 வார காலத்திற்குள் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய நிர்வாகிகள் தேர்தலை நடத்த வேண்டும்’ என்று உத்தரவிட்டது. ஐ.பி.எல். அமைப்பில் தொடர்பு உடையவர்கள் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிடவும் தடை விதிக்கப்பட்டது.

இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளராக இருக்கும் என்.சீனிவாசன், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிட முடியாத நிலைமையில் இருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமத்தை துறந்தால் மட்டுமே அவரால் கிரிக்கெட் வாரிய தேர்தலில் போட்டியிட முடியும். ஆனால் இது பற்றி அவர் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயற்குழு கூட்டம் வருகிற 8-ந்தேதி சென்னையில் நடக்கிறது. இதில், கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தலுக்கான ஆண்டு பொதுக்குழு கூட்டத்தை எப்போது நடத்துவது என்பது முடிவு செய்யப்படுகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தரும் உறுப்பினர்களை என்.சீனிவாசன் தனியாக சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top