ராஜபக்சேவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு!

ராஜபக்சேஇலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவுக்கு எதிராக முன்னிலை சோசலிச கட்சி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

இது தொடர்பாக முன்னிலை சோசலிச கட்சி நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த அதிபர் தேர்தலின் போது தேர்தல் ஆணையத்தின் அனுமதி  பெறாமலேயே, ராஜபக்சே ராணுவத்தை அழைத்துள்ளார். இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது.

ஆயுதப் படையினருக்கு காவல்துறை அதிகாரங்களை அளிக்கும் வகையில் ராணுவத்தினர் அழைக்கப்பட்டுள்ளனர்.

2011ஆம் ஆண்டில் அப்போதைய அரசாங்கம் அவசரகால சட்டத்தை நீக்கியது. எனினும், பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தைப் பயன்படுத்தி முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் காவல்துறை அதிகாரங்களை, முப்படையினருக்கு வழங்கும் அதிகாரங்களை அரசாங்கம் தொடர்ச்சியாக மாதம் தோறும் நீடித்து வந்தது.

இதன் தொடர்பாக அவசரகாலச் சட்டத்தை நீக்கி ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டதாக தோற்றத்தை உருவாக்கி, தொடர்ந்தும் ராணுவ அடக்குமுறையின் கீழ் அரசாங்கம் ஆட்சி நடத்தியுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் முக்கிய பிரதிவாதியாக முன்னாள் அதிபர் ராஜபக்சே சேர்க்கப்பட்டுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top