மகாராஸ்டிர மாநிலம் யவத்மால் மாவட்டத்தில் உள்ள நிக்னூர் என்ற கிராமத்தில், சங்கர் ஆக்ரே என்ற 2 வயது சிறுவன் நேற்று முன்தினம் மாலை விளையாடிக் கொண்டிருந்தபோது மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தான்.
இதையடுத்து பேரிடர் மீட்பு படையினர் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் சுமார் 10 மணிநேர போராட்டத்துக்குப்பின் சிறுவனை மீட்டனர். மீட்கப்பட்ட சிறுவன் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.