சிம்பு-நயன்தாரா படத்தில் ஆர்யா!

இது நம்ம ஆளுநிஜ வாழ்க்கையில் காதலர்களாக இருந்து, பின்னர் பிரிந்த சிம்பு – நயன் ஜோடி நீண்ட நாட்களுக்குப் பிறகு சேர்ந்து நடித்துள்ள படம் இது நம்ம ஆளு.

இந்தப் படத்தை பசங்க, மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய பாண்டிராஜ் இயக்கி வருகிறார். சிம்புவின் சகோதரர் குறளரசன் முதல் முறையாக இந்த படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக சிம்பு நடித்த படங்கள் எதுவும் வெளிவராத நிலையில், சமீபத்தில் வெளியிடப்பட்ட இது நம்ம ஆளு பட டீசருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இது படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் படத்தின் ஒரு காட்சியில் ஆர்யா சிறப்பு தோற்றத்தில் வருகிறாராம்.

இதற்கு முன்பு சிவா மனசுல சக்தி, காதல் சொல்ல வந்தேன், வா, ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற பல படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வந்த ஆர்யா சில காலமாகவே இந்த பழக்கத்தை நிறுத்தி வைத்திருந்தார். ஆனால் தற்போது ஜீவா, இது நம்ம ஆளு, ரோமியோ ஜூலியட் போன்ற படங்களின் மூலம் இவர் மீண்டும் கௌரவ தோற்றத்தில் நடிக்க தொடங்கியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top