பிணைக் கைதி கொலை: ஜப்பான் அரசுக்கு ஐஎஸ் அமைப்பு எச்சரிக்கை!

_80705173_025681501-1ஐஎஸ் அமைப்பினர் ஜப்பானை சேர்ந்த மற்றொரு பிணைக் கைதியின் தலையை துண்டித்து கொலை செய்துள்ளனர்.

இது தொடர்பாக இணையதளங்களில் வெளியாகியுள்ள வீடியோ, ஜப்பான் அரசுக்கு ஒரு செய்தி எனத் தொடங்குகிறது. பிணைக் கைதி கென்ஜி கோடோவும், பயங்கரவாதி ஒருவரும் வீடியோவில் இடம்பெற்றுள்ளனர். கோடோவின் தலையை துண்டிப்பதற்கு முன்பாக, பயங்கரவாதி ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேவை எச்சரிக்கிறார்.

அதில் ஐஎஸ் அமைப்புக்கு எதிரான கூட்டணியில் ஜப்பான் இணைந்து பணியாற்றுவதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கோடோவை கொலை செய்வதாகவும் இனி எந்த ஒரு ஜப்பானியரை கண்டாலும் அவர்களையும் கொலை செய்வோம் என்றும் பயங்கரவாதி மிரட்டல் விடுத்துள்ளார்.

ஐஎஸ் அமைப்பினர் பிடியில் இருந்த ஜப்பான் பிணைக் கைதி ஹருணா யுகாவாவை மீட்பதற்காக கடந்த அக்டோபர் மாதம் செய்தியாளரான கென்ஜி கோடோ, சிரியா சென்றிருந்தார். அவரையும் பிடித்து வைத்த பயங்கரவாதிகள் இரண்டு பேரது தலையையும் துண்டித்து கொலை செய்துள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top