கிரிக்கெட் வாரிய தேர்தலில் சரத்பவார் போட்டி

Sharad-Pawarஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த 22–ந்தேதி தீர்ப்பு வழங்கியது. அப்போது கிரிக்கெட் வாரிய தேர்தலை 6 வாரங்களுக்குள் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

என்.சீனிவாசனுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது. ஐ.பி.எல். அணியா? கிரிக்கெட் வாரியமா? இதில் ஏதாவது ஒன்றை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

இதற்கிடையே கிரிக்கெட் வாரிய தலைவர் பதவிக்கான தேர்தலில் முன்னாள் மத்திய மந்திரியான சரத்பவார் போட்டியிட போவதாக தகவல் வெளியாகி உள்ளது. மும்பை கிரிக்கெட் சங்கம் சார்பில் கிரிக்கெட் வாரியத்தின் வருடாந்திர பொதுக்குழுவில் பங்கேற்று போட்டியிடுகிறார்.

சரத்பவார் 2005– 2008–ம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராகவும், 2010–2012–ம் ஆண்டு வரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராகவும் பணியாற்றி உள்ளார்.

தலைவர் பதவிக்கு மீண்டும் களம் இறங்க இருக்கும் சரத்பவார் தனக்கு முன்னாள் தலைவர்களான சசாங்க் மனோகர், ஐ.எஸ்.பிந்த்ரா ஆகியோர் ஆதரவு அளிப்பார்கள் என்று நம்புகிறார். தனக்கு முழுமையான ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் தான் சரத்பவார் அதிகாரப் பூர்வமாக களம் இறங்குவார் என்று கூறப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top