சாரதா சிட்பண்ட் மோசடி: நடிகர் மிதுன் சக்கரவர்த்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை!

mithun chakrabortyமேற்கு வங்காளத்தில் நடந்த பல ஆயிரம் கோடி சாரதா சிட்பண்ட் மோசடியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சிக்கி தவிக்கிறது. அந்த கட்சியின் 2 எம்.பி.க்களும், ஒரு மந்திரியும் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன் பிறகு திரிணாமுல் காங்கிரசில் முதல்–மந்திரி மம்தா பானர்ஜிக்கு அடுத்த இடத்தில் இருக்கும் முன்னாள் ரெயில் மந்திரி முகுல்ராய்க்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து விசாரணை நடத்தியது.

இதற்கிடையே சாரதா குழும கணக்குகளை ஆய்வு செய்ததில் நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கும் கோடிக் கணக்கில் பணம் வழங்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மிதுன் சக்கரவர்த்தி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் முக்கிய உறுப்பினர் ஆவார். டெல்லி மேல்–சபை எம்.பி.யாகவும் இருக்கிறார்.

இதைடுத்து மிதுன் சக்கர வர்த்திக்கு அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பி வரவழைத்து விசாரணை நடத்தினார்கள்.

அப்போது மிதுன் சக்கரவர்த்தி சாரதா குழுமம் நடத்தும் டி.வி. சேனலில் தலைமை ஆலோசகராக பணியாற்றியதாகவும் டி.வி. யில் ஒளிபரப்புவதற்காக அரசியல் தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்தியதாகவும், இதற்காகத்தான் தனக்கு பணம் வழங்கப்பட்டதாகவும் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

மேலும் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் சாரதா குரூப் தலைவர் சுதிப்தா சென்னை கடந்த 2010–ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் முறையாக கொல்கத்தாவில் உள்ள சோனர் பங்களா ஓட்டலில் சந்தித்ததாகவும், அப்போது திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. குணால் கோஷ் உடன் இருந்ததாகவும் குணால் கோஷ்தான் தன்னை சுதிப்தா சென்னிடம் அறிமுகப்படுத்தி டி.வி.க்காக அரசியல் நிகழ்ச்சிகள் நடத்த கேட்டுக் கொண்டார் என்றும் மிதுன் சக்கரவர்த்தி கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து 2010–ம் ஆண்டு நவம்பர் மாதம் 5–ந்தேதி தன்னை அந்த பொறுப்புக்கு நியமனம் செய்து கடிதம் கொடுத்தால் முன்பணமாக ரூ.10 லட்சம் செக்காக வழங்கினார். சுதிப்தா சென்னிடம் இருந்து மொத்தம் ரூ.1.76 கோடி பெற்றுக் கொண்டேன் என்று கூறிய சக்கரவர்த்தி டி.வி. நிகழ்ச்சி ஒப்பந்தம் தவிர வேறுஎந்த ஒப்பந்தமும் எங்களுக்கு இடையே தெரியாது. சாரதா சிட்பண்ட் மோசடியில் தனக்கு தொடர்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top