முன்னாள் திமுக எம்.எல்.ஏ. மகேஷ் கிருஷ்ணசாமிக்கு வேல்முருகன் எச்சரிக்கை!

thanjai velmuruganதமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளரும், தென்மண்டல பொறுப்பாளருமான தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த ஆர்.பி. தமிழ்நேசன் மீது, தி.மு.க.வின் திருவோணம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. கே.டி. மகேஷ் கிருஷ்ணசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். இதைக் கண்டித்து தஞ்சையில் 31ஆம் தேதி (இன்று) தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர்.

அதன்படி இன்று நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி பேசிய அக்கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகன், ”எங்கள் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவரும், மாநில துணைப்பபொதுச்செயலாளருமான ஆர்.பி.தமிழ்நேசன் அரிவாள், மற்றும் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டிருக்கிறார். சொட்டச் சொட்ட ரத்தம் சிந்திருக்கிறார். ஏன் சம்மந்தப்பட்டவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யவில்லை. இந்த தாக்குதலில் ஈடுபட்டமுன்னாள் எம்.எல்.ஏ. மகேஷ் கிருஷ்ணசாமி மீதும், அவர் தந்தை மீதும் காவல்துறையினர் வழக்கு பதியாமல் அடையாளம் தெரியாதவர்கள் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். இது எந்த விதத்தில் நியாயம்?

தமிழகத்தில் உள்ள இன்னும் வேறு சில அமைப்புகள் நாங்களும் போராட்டத்திற்கு வருகிறோம், சேர்ந்து போராடுவோம் என்று சொன்னார்கள். நான்தான் இருக்கட்டும் பார்த்துக்கொள்வோம் என்று சொன்னேன். நாங்கள் என்னமோ ஆண்ட கட்சி, பெரிய கட்சி, உயர்ந்த சாதி என்று மகேஷ்கிருஷ்ணசாமியை நினைத்து தமிழ்நேசனை அடித்து, உதைத்து இருந்தால், அப்படி நினைத்தால் இனி ஒரு பயளும் எங்கள் வடமாவட்டத்தை தாண்டி சென்னைக்கு போக முடியாது. நான் என்னமோ பயந்து போய் அரசியல் கட்சி ஆரம்பித்துவிட்டதாக நினைக்க வேண்டாம். ஆளானப்பட்ட, சாதி வெறி பிடித்த ராமதாஸையே எதிர்த்து வந்து அரசியல் கட்சி ஆரம்பித்தவன். காடுவெட்டி குருவையே வீடு புகுந்து அடித்து, உதைத்திருக்கிறோம். ராமதாஸ், காடுவெட்டி குருவைவிட நீங்கள் ஒன்றும் பெரியஆள் கிடையாது என்பதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.

நாங்கள் சாதி பார்க்காமல் தமிழர்களின் நலனில் அக்கறை கொண்டுதான் இந்த இயக்கத்தை ஆரம்பித்துள்ளோம். மானம் ஒன்றுக்காகவும், தன்மானத்திற்காகவும்தான் வாழ்கிறோம். இந்த அநியாயத்திற்கு, அக்கிரமத்திற்கு முடிவு கட்டத்தான் இங்கு கூடியுள்ளோம். எங்கள் இளைஞர்களை வேறு மாற்று சிந்தனைக்கு தூண்டி விடாதீர்கள். எங்களால் இளைஞர்களை திரட்ட முடியதா? திருப்பி அடிக்க முடியாதா? எங்களாலும் செய்ய முடியும், அதை செய்ய விரும்பவில்லை. இப்போது நாங்கள் ஜனநாயக முறைப்படித்தான் கேட்கிறோம். அதிலும் செவிசாய்க்கவில்லையென்றால் தஞ்சையிலிருந்து, தமிழ்நாடு முழுவதும் ஒரு தீயாக பத்திக்கிட்டு எரியும். இந்த ஆர்ப்பாட்டத்திற்குக்கூட பசுமைப்பாண்டியன், ஜான் பாண்டியன் எல்லாம் வருகிறோம் என்று சொன்னார்கள், இல்லை நாங்களே பார்த்துக்கொள்கிறோம் என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறேன்.

காவல்துறையின் வீரம் எங்களை போன்ற சாமானிய மக்களிடம் காட்டத்தான் முடியும். உண்மையிலேயே காவல்துறையினர் என்ன செய்திருக்க வேண்டும் வழக்கு பதிந்து குற்றவாளியை கைது செய்திருக்க வேண்டுமல்லவா? ஏன் அதை செய்யவில்லை. காவல்துறை தி.மு.க.வுக்கு துணைப்போகிறதா? இது ஜனநாயக நாடு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். காவல்துறையினர், அடுத்து என்னமோ தி.மு.க. ஆட்சிக்கு வரப்போவதாக நினைத்துக்கொண்டு, தி.மு.க.வினருக்கு சல்யூட் அடிக்கிறார்கள். இனிமேல் ஒருபோதும் தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியாது என்பதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். தி.மு.க. தலைவர் கலைஞர், ஸ்டாலின், அழகிரி, கனிமொழி இவர்களின் குடும்ப பிரச்னையை சமாளிக்க முடியாமல் தள்ளாடுகிறார்.

ஆகையால் எம்.எல்.ஏ. மகேஷ்கிருஷ்ணசாமி மீது வழக்கு பதிவு செய்யும் வரை எங்களுடைய போராட்டம் ஓயாது. நாங்களும், வேல், கம்பு, அரிவாள் எடுப்போம் என எச்சரிக்கை விடுக்கிறேன்” என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top