அஜித்துடன் இணையும் சிம்பு!

Ajith-Simbuஅஜித்தின் மீது தீவிர பற்று உடையவர் நடிகர் சிம்பு. அஜித் படம் வெளியாகும் முதல்நாளே அவருடைய படத்தை பார்க்கும் முதல் ரசிகனாக இன்றும் இருந்து வருகிறார் சிம்பு. அஜித்துடன் இணைந்து ஏதாவது ஒரு படத்தில் நடித்துவிட வேண்டும் என்ற ஆசையும் சிம்புவுக்கு உண்டு.

இந்நிலையில், இருவரும் முதல்முறையாக இணையவிருக்கிறார்கள். இது படத்தில் அல்ல. திரையரங்குகளில். அதாவது, வருகிற பிப்ரவரி 5-ந் தேதி அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ படம் உலகம் முழுவதும் வெளியாகிறது. அன்றைய தினத்தில் இருந்து, சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘இது நம்ம ஆளு’ படத்தின் டீசரை திரையரங்குகளில் வெளியிடவிருக்கின்றனர்.

‘இது நம்ம ஆளு’ படத்தை ‘பசங்க’ இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். சிம்புவுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இந்த வருடத்தில் இப்படம் வெளியாகவுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top