பி.வி.சிந்து உள்பட 5 பேருக்கு பத்மஸ்ரீ விருது

pv sindhuமத்திய அரசு அறிவித்துள்ள பத்ம விருதுகளுக்கு விளையாட்டுத்துறையைச் சேர்ந்த 6 பேர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

உலக பேட்மிண்டன் போட்டியில் 2 முறை வெண்கலப்பதக்கம் வென்ற ஒரே இந்தியரான வீராங்கனை பி.வி.சிந்து, இந்திய ஆண்கள் ஆக்கி அணியின் கேப்டன் சர்தார் சிங், ஆக்கி வீராங்கனை சபா அஞ்சும், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், முன்னாள் கைப்பந்து வீராங்கனையும், தற்போது மலையேற்ற சாகசத்தில் ஈடுபட்டு வருபவருமான அருனிமா சின்ஹா ஆகியோர் பத்ம ஸ்ரீ விருதை பெறுகிறார்கள்.

இதில் அருனிமா சின்ஹா, 2011-ம் ஆண்டு ரெயில் பயணத்தின் போது கொள்ளை கும்பலால் தூக்கி வீசப்பட்டதில் இடதுகாலை இழந்தவர். அதன் பிறகு மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்ட அருனிமா, செயற்கை காலுடன் எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய முதல் இந்தியர் என்ற பெருமைக்குரியவர்.

முன்னாள் மல்யுத்த வீரரும் இரட்டை ஒலிம்பிக் பதக்கம் வென்ற சுஷில்குமாரின் பயிற்சியாளருமான டெல்லியை சேர்ந்த சத்பால் சிங் பத்மபூஷண் விருதை பெறுகிறார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top