ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் 31-ம் தேதிக்குள் சொத்துக் கணக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

மத்திய அரசுவலுவூட்டப்பட்ட புதிய லோக்பால் சட்டத்தின்படி மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் பணியாற்றும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். அதிகாரிகள் தங்களது ஆண்டு சொத்துக் கணக்குகளை ஜனவரி மாதத்துக்குள் சமர்ப்பித்தாக வேண்டும்.

அவ்வகையில், இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் தேதி நிலவரப்படி மேற்படி அதிகாரிகளின் வருமானம், அவர்களின் மனைவி மற்றும் பிள்ளைகள் பெயரில் இருக்கும் சொத்துக் கணக்கு மற்றும் கடன் பொறுப்பு விபரங்களை வரும் 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்தாக வேண்டும்.

இந்த இறுதி கெடுவுக்கு இன்னும் 8 நாட்களே உள்ளதால் அந்த தேதிகளுக்குள் தங்களது சொத்து கணக்குகளை தாக்கல் செய்யும்படி மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top