பீகார் நீதிமன்றத்தில் குண்டு வெடிப்பு : 2 பேர் பலி!

ara-court-54c1f6a5509c8_exlபீகார் மாநிலத்தின் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா நகரத்தில் உள்ள நீதிமன்றத்தில் நண்பகல் 12 மணியளவில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.

முதற்கட்ட தகவலின் படி பெண் ஒருவரே இந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டோடு நீதிமன்றத்திற்குள் நுழைந்து, தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிகிறது. தாக்குதலில் அந்தப்பெண் சம்பவ இடத்தில் பலியானார். இத்தாக்குதலின் போது நீதிமன்றத்தினுள் இருந்த காவல் துறை அதிகாரி ஒருவரும் பலியானார். மேலும் 14 பேர் படுகாயமடைந்தனர்.

வரும் 26 ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவிற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வருகை தர உள்ள நிலையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திருப்பது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top