இது நம்ம ஆளு டீசருக்கு கிடைத்த வரவேற்பால் உற்சாகத்தில் சிம்பு

Simbuசிம்பு தற்போது ‘இது நம்ம ஆளு’ படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். பாண்டிராஜ் இப்படத்தை இயக்கி வருகிறார். குறளரசன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சிம்பு நடிப்பில் கடந்த மூன்று வருடங்களுக்கு எந்தப் படமும் வெளிவரவில்லை. ஆனாலும் சமீபத்தில் வெளியான ‘இது நம்ம ஆளு’ படத்தின் டீசர் வெளி வந்த சில நாட்களிலேயே பெரிய அளவில் எல்லோருடைய கவனத்தையும் ஈர்ந்து முத்திரைப் பதித்திருக்கிறது.

இளம் ரசிக ரசிகைகளின் இதய துடிப்பை துல்லியமாக கணித்து வைத்து இருக்கும் எஸ்.டி.ஆருக்கு இந்த வருடம் தொடர்ச்சியாக மூன்று படங்கள் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வருடம் அவரது திரை பயணத்தில் முக்கியமானது எனக் கருதப்படுகிறது.

தன் மனதில் பட்டதை சரி என்று பட்டென உடைத்திடும் எஸ்.டி.ஆருக்கு அந்த குணத்துக்காக கூடிடும் ரசிகர் கூட்டம் ஏராளம். அந்த வகையில் ‘இது நம்ம ஆளு’ டீசரில் வரும் எஸ்.டி.ஆரின் வசனங்களுக்கும், அவரை குறித்த வசனங்களுக்கும் ஏராளமான வரவேற்புக் கிட்டியது.

‘என் படத்துக்கு ரசிகர்கள் இடையே கிடைத்து உள்ள இந்த வரவேற்பு மகத்தானது. என் ரசிகர்களுக்கு மட்டுமின்றி எல்லோருக்கும் பிடித்த வகையில் இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இவ்வளவு இடைவெளிக்கு பிறகும் எனக்கும் என் படங்களுக்கும் இந்த அளவுக்கு வரவேற்பு கொடுத்து இருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. எனக்கும் அவர்களுக்கும் உள்ள பந்தத்தை பலபடுத்தி அவர்களுக்காகவே மேலும் நல்ல படங்கள் தர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்’ என்று தன்னம்பிக்கை மிளிர சிம்பு கூறுகிறார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top