ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஷரபோவா, முர்ரே 3–வது சுற்றுக்கு தகுதி

Sharapovaகிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் பிரிவின் 2வது சுற்று ஆட்டத்தில் டென்னிஸ் தரவரிசை பட்டியலில் 2வது நிலையில் உள்ள ரஷியாவின் மரியா ஷரபோவா போராடி வெற்றி பெற்றார்.

தனது சக நாட்டவரான அலெக்சாண்ட்ரா பனோவாவை எதிர்த்து விளையாடிய ஷரபோவா, முதல் செட்டை 6-1 என்ற புள்ளி கணக்கில் கைப்பற்றினார். ஆனால் 2வது செட்டை 4-6 என்ற புள்ளி கணக்கில் பறிகொடுத்தார். எனினும் 3வது செட்டில் சுதாரித்து விளையாடிய அவர் அந்த செட்டை 7-5 என்ற புள்ளிக்கணக்கில் 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்ற ஆட்டங்களில் 10–ம் நிலை வீராங்கனை மகரோவா (ரஷியா), 21–வது வரிசையில் இருக்கும் பெங் (சீனா), கரோலினா (செக்குடியரசு) ஆகியோர் வென்று 3–வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

6–ம் நிலை வீரரான ஆண்டி முர்ரே (இங்கிலாந்து) இரண்டாம் சுற்றில் 6–1, 6–3, 6–2 என்ற நேர் செட் கணக்கில் ஆஸ்திரேலிய வீரர் மரின் கோவை வீழ்த்தினார்.

இதே போல 7–ம் நிலை வீரர் தாமஸ் பெர்டிச் (செக் குடியரசு) 7–6 (7–0), 6–2, 6–2 என்ற செட் கணக்கில் ஆஸ்திரியா வீரர் மெல்சரை வீழ்த்தினார்.

மற்ற ஆட்டங்களில் ரிச்சர்டு (பிரான்ஸ்), பகாதிஸ் (சைபரஸ்), கெவின் ஆண்டர்சன் (தென் ஆப்பிரிக்கா) ஆகியோர் வென்று 3–வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top