வங்கி ஊழியர் சங்கங்களுடன் மும்பையில் இன்று பேச்சுவார்த்தை!

bank employees-STRIKEபொதுத்துறை வங்கி ஊழியர்கள் வருகிற 21ம் தேதி முதல் 4 நாட்கள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், ஊதிய உயர்வு தொடர்பாக மும்பையில் இன்று பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்றால் ஏற்கனவே அறிவித்திருந்தபடி ஜனவரி 21ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை வேலைநிறுத்ததில் ஈடுபடப் போவதாக வங்கி ஊழியர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், 26ஆம் தேதி குடியரசு தின விடுமுறை என்பதாலும் தொடர்ந்து 6 நாட்களுக்கு வங்கிச் சேவைகள் முடங்கும் நிலை உருவாகும்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top