பப்புவா நியூ கினியா அகதி மையத்தில் ஏற்பட்ட கலவரத்தில் ஒருவர் பலி: 77 பேர் காயம்

papuva new guineaஆஸ்திரேலியாவில் அகதி தஞ்சம் கோரி கடல் வழியே வரும் அகதிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனைத் தடுக்கும் விதமாக, இவ்வாறு வந்து அடைக்கலம்கேட்பவர்களையும், ரோந்துப் படையினரால் கடலில் தடுக்கப்படுவோரையும் ஆஸ்திரேலியாவிலிருந்து நிரந்தரமாக வெளியேற்றி குடியேற்றுவதற்கு பப்புவா நியூ கினியாவைச் சேர்ந்த மானஸ் அல்லது நவ்ரு தீவுகளை அந்நாடு உபயோகித்து வருகின்றது. இவற்றில் மானஸ் தொலைதூர பசிபிக் முகாம்களில் ஒன்றாகும்.

இந்தக் குடிவரவு மையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்கள் தங்களுக்கான குடியேற்ற உரிமையைக் கோரி கடந்த சில வாரங்களாக அமைதியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஆனால் கடுமையான குடிவரவுக் கொள்கைகளைக் கொண்ட ஆஸ்திரேலியாவுக்கு எதிரான குடியுரிமை ஆர்ப்பாட்டம் வன்முறைக் கலவரமாக மாறியது.

கடந்த சனிக்கிழமை இரவு நடைபெற்ற கலவரம் ஞாயிறன்றும் தொடர்ந்ததில் அங்கு தங்கிருந்த 35-க்கும் மேற்பட்டோர் தங்கள் இருப்பிடங்களில் இருந்து வெளிவந்து மற்றவர்களுடன் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஒருவர் பலியானதுடன், 77 பேர் காயமடைந்துள்ளனர். இதுகுறித்து தனது வருத்தத்தைத் தெரிவித்த குடிவரவு அமைச்சர் ஸ்காட் மோரிசன் குடிவரவு மையத்தை விட்டு வெளியேறி வன்முறைகளில் இவர்கள் ஈடுபட்டது ஒரு ஆபத்தான நிலைமையை உருவாக்கியிருக்கக்கூடும் என்று குறிப்பிட்டார்.

காயமடைந்த 77 பேரில் 13 பேரின் நிலைமை மோசமாக இருப்பதாகவும் அவர் கூறினார். இவர்களுள் மண்டை உடைந்த ஒருவரும், பின்புறத்தில் துப்பாக்கி சூடுகள் பெற்ற மற்றொருவரும் சிகிச்சைக்காக ஆஸ்திரேலியாவிற்கு கொண்டு செல்லப்படுகின்றனர். இவர்களில் சிலர் காணாமல் போவதற்கும் வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்ட அமைச்சர் அவர்கள் முகாம்களின் வெளிப்புறத்திலேயே சண்டையிட்டதால் தங்குமிடங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top