முன்னாள் அதிபர் ராஜபக்சே கொழும்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக சம்மன்!

ராஜபக்சேவருகின்ற ஜனவரி 26 ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி ராஜபக்சேவுக்கு கொழும்பு நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

இலங்கை சுதந்திரக் கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து தன்னை ராஜபக்சே நீக்கியது செல்லாது என முல்லேரியா பிரதேச சபை தலைவர் பிரசன்ன சோலங்காரச்சி என்பவர் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அவர் தனது மனுவில், வடக்கு மாகாண கவுன்சில் தலைவர் பிரசன்ன ரணதுங்காவின் வீட்டில் வைத்து என்னை கட்சியில் இருந்து நீக்குவதற்காக இலங்கை சுதந்திர கட்சியின் சில செயற்குழு உறுப்பினர்களிடம் வெற்றுத் தாள்களில் ராஜபக்சே கையெழுத்து வாங்கினார்.

முறைப்படி செயற்குழு கூட்டம் நடத்துவதற்கு மூன்று நாட்கள் முன்னதாக அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும். ஆனால், அந்த கூட்டம் அறிவிப்பு வெளியிடப்பட்ட ஒரே நாளில் நடத்தப்பட்டது. தனது எதிர்ப்பாளர்களை புறக்கணித்து கட்சியின் தலைவராகிவிட ராஜபக்சே இந்த செயற்குழுவில் திட்டம் தீட்டினார்.

இதற்கு இடையூறாக என்னை கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து ராஜபக்சே நீக்கி விட்டார். இந்த நீக்கம் செல்லாது என அறிவிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மறு விசாரணையை வருகின்ற 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, பிரதிவாதிகளான மகிந்த ராஜபக்சே உள்ளிட்ட நால்வருக்கு அன்று நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பும்படி உத்தரவிட்டுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top