ரசிகர்களுக்கு இரட்டை விருந்து படைக்கவிருக்கும் தனுஷ்!

dhanush_vai raja vai 1தனுஷ் நடிப்பில் தமிழில் உருவாகியுள்ள புதிய படம் ‘அனேகன்’. இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும், இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘டங்காமாரி’ பாடலும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில், படத்தை வரும் பிப்ரவரி 13-ந் தேதி காதலர் தின கொண்டாட்டமாக வெளியிடவிருக்கிறார்களாம்.

இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டாலும், ஜனவரியில் விக்ரமின் ‘ஐ’, அஜித்தின் ‘என்னை அறிந்தால்’, விஷாலின் ‘ஆம்பள’, சிவகார்த்தியேனின் ‘காக்கிச்சட்டை’ ஆகிய பெரிய படங்கள் வெளியாவதால் பிப்ரவரியில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தனுஷ் இந்தியில் நடித்துள்ள ‘ஷமிதாப்’ படமும் பிப்ரவரி 6-ந் தேதி வெளியாகவிருக்கிறது. இதற்கு அடுத்த வாரமே ‘அனேகன்’ படம் வெளிவரவிருப்பது பிப்ரவரி மாதத்தில் தனுஷ் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து காத்து இருக்கிறது.

‘ஷமிதாப்’ படத்தில் தனுஷுடன் பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனும் இணைந்து நடித்துள்ளார். தனுஷுக்கு ஜோடியாக கமலின் இளையமகள் அக்ஷராஹாசன் நடித்துள்ளார். பிரபல பாலிவுட் இயக்குனர் பால்கி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top