தமிழ் மொழியின்றி இந்தியா முழுமை பெற முடியாது: தருண்விஜய்!

11IN_LPN_TARUN_VIJ_2275718fபா.ஜனதா எம்.பி. தருண்விஜய் திருவள்ளுவர் திருப்பயணத்தை கன்னியாகுமரியில் இருந்து தொடங்கினார். நேற்று அவர் தூத்துக்குடி வந்தார். பின்னர் மத நல்லிணக்க சமுதாய கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

திருவள்ளுவர் நமக்கு ஒற்றுமை, கலாச்சாரம், பண்பாட்டின் அடையாளமாக விளங்குகிறார். திருவள்ளுவரின் உயரிய கருத்துக்களில் தீவிரவாதத்திற்கு தீர்வு உள்ளது. இந்தியா முழுவதும் திருக்குறளின் கருத்துக்களை பரப்ப வேண்டும்.

திருக்குறளும் திருவள்ளுவரும் ஒட்டு மொத்த கலாச்சாரம் மற்றும் பண்பாட்டின் அடையாளம். நானும் எனது குடும்பத்தினரும் தமிழ் படிக்கிறோம். எனது தாய் மொழி இந்தி மொழியானாலும், தமிழ் மொழியை மிகவும் நேசிக்கிறேன். தமிழ் மொழி இந்தியாவின் தாய் மொழியாக மாறும் காலம் விரைவில் வரும். தமிழ் மொழியின்றி இந்தியா முழுமை பெற முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது பா.ஜனதா மாநில துணை தலைவர் வானதிசீனிவாசன் மற்றும் பலர் உடனிருந்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top