இஸ்ரோவின் புதிய தலைவராக ஏ.எஸ்.கிரண் குமார் நியமனம்!

13TH_KIRAN_ISRO_MA_2276965eஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் புதிய தலைவராக ஏ.எஸ்.கிரண் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான நியமனக்குழு அவரை நியமித்து உத்தரவு பிறப்பித்திருப்பதாக பிரதமர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கிரண் குமார் மூன்றாண்டுகளுக்கு தலைவராக இருப்பார் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருக்கிறது.

கிரண்குமார் ஸ்பேசஸ் அப்ளிக்கேசன் மையத்தின் இயக்குநராக இருந்தவர். இஸ்ரோவின் தலைவர் பொறுப்பில் இருந்து கடந்த மாதம் ராதாகிருஷ்ணன் ஓய்வுபெற்ற நிலையில், புதிய தலைவராக கிரண் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top