ராஜபக்சேவால் நியமிக்கப்பட்ட தலைமை நீதிபதி பதவி விலக கோரி வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்!

Lawyer attempts to remove police barrier as police officers try prevent his group from accessing the supreme courts in Colomboஇலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவால் நியமிக்கப்பட்ட சுப்ரீம் கோர்ட் நீதிபதி மோஹன் பீரிஸ் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என தலைநகர் கொழும்புவில் ஏராளமான வக்கீல்கள் இன்று பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதியாக இருந்த சிராணி பண்டாரநாயக்கா மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு சுமத்திய ராஜபக்சே அவரை பதவியில் இருந்து நீக்கினார். தனக்கு மிகவும் வேண்டப்பட்டவரான மோஹன் பீரிஸ் என்பவரை கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் அந்த பதவியில் அமர்த்தினார்.

சமீபத்திய தேர்தலில் ராஜபக்சே மண்ணைக் கவ்வியதையடுத்து அங்கு மைத்ரிபாலா சிறிசேனா தலைமையில் புதிய அரசு அமைந்துள்ளது. இந்நிலையில், ராஜபக்சேவால் நியமிக்கப்பட்ட மோஹன் பீரிஸ் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக மீண்டும் சிராணி பண்டார நாயக்காவை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இன்று காலை ஏராளமான வக்கீல்கள் தலைநகர் கொழும்புவில் உள்ள சுப்ரீம் கோர்ட் வாசலிலும், நீதித்துறை அமைச்சகத்தின் முன்பாகவும் பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய இலங்கை வக்கீல்கள் சங்க தலைவர் உப்புல் ஜெயசூரியா, ‘மோஹன் பீரிஸ் கண்ணியத்துடன் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம். இன்னும் 24 மணி நேரத்துக்குள் அவர் ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையென்றால், நாளை மீண்டும் இதே இடத்துக்கு வந்து போராட்டம் நடத்துவோம்’ என எச்சரித்துள்ளார்.

வக்கீல்களின் ஆர்ப்பாட்டத்துக்கு பயந்து தலைமை நீதிபதி மோஹன் பீரிஸ் இன்று சுப்ரீம் கோர்ட்டுக்கு வரவில்லை என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top