தென் தமிழகத்தில் இன்று மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்

weatherதமிழ்நாட்டில் அக்டோபர் மாதம் 17-ந்தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை கடந்த 4-ந்தேதியுடன் முடிவடைந்ததாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. பருவமழைக் காலத்தில் 43 செ.மீ. அளவு மழை சராசரியாக பெய்துள்ளது.

வடகிழக்கு பருவமழை முடிவடைந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே காணப்படுகிறது. காலை மற்றும் இரவு நேரங்களில் இயல்புக்கு மாறாக கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. தென் தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தென்மேற்கு வங்கக் கடலை ஒட்டியுள்ள, இந்திய பெருங்கடல் அருகே மேல் அடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

வட தமிழகத்தில் வறண்ட வானிலையே காணப்படும். சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தமட்டில் வறண்ட வானிலையே காணப்படும். மாலை 6 மணி முதல் காலை 7 மணி வரை பனிப்பொழிவு காணப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top